அதிமேதகு ஜனாதிபதியாக இருந்தவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார் – அநுரகுமார

கிரிபத்கொடையில் நேற்றைய தினம் (17) நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரக்கூட்டத்தில், அந்த கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கலந்...

அதிமேதகு ஜனாதிபதியாக இருந்தவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார் – அநுரகுமார
கிரிபத்கொடையில் நேற்றைய தினம் (17) நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரக்கூட்டத்தில், அந்த கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் கம்பஹா மாவட்டத்திற்கான முதலாவது பிரசாரக்கூட்டம், பல கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமானது.

இதன்போது, இரண்டு வருடங்கள் இருக்கையில் மேலும் 7 வருடங்கள் ஆட்சிபுரியும் பேராசை காரணமாகவே மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலை நடத்தியதாக அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

மேலும், அதிமேதகு ஜனாதிபதியாக இருந்தவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுவதாகவும் அவ்வாறே பாராளுமன்ற உறுப்பினரானாலும் அவருக்கு எதிரான ஊழல் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் குற்றவாளியாகக் கருதப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகும் என அநுரகுமார குறிப்பிட்டார்.

Related

தலைப்பு செய்தி 8152452945972822066

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item