மே 27…… என்ன நடந்தது….?? எது அடைந்து கொள்ளப்பட்டது….??
முகம்மது ஜலாலுதீன் அப்துல் பாஸித் தென்கிழக்கு பல்கலைக்கழகம் முகநுலில் உள்ள சில நண்பர்களின் எண்ணத்தில் உருவாகியதுதான் இம்...

http://kandyskynews.blogspot.com/2015/05/27.html

தென்கிழக்கு பல்கலைக்கழகம்
முகநுலில் உள்ள சில நண்பர்களின் எண்ணத்தில் உருவாகியதுதான் இம் முகநுல் போராட்ட திட்டம்…ஆர்ப்பரிப்பு இல்லாமல் அமைதியின்மை இல்லாமல், தமது சுழலுக்கும் பாதிப்பில்லாமல் புதிய தகவல் தொழிநுட்ப உதவியுடன் புதிதான ஒரு வழியை உருவாக்கி சென்றிருக்கிறது இப் போராட்டம்..
நேற்று இதற்கான ஆரம்ப பதிவுகள் இடப்பட்ட போது இக் கோரிக்கை வெற்றியலிக்குமா…. இல்லை பத்தோடு பதினொன்றாக முஸ்லிம் நண்பர்களின் காதில் பட்டு மறைந்து விடுமா எனும் எண்ணத்தினுடனேயே பதிவிடப்பட்டது.
ஆனால் அடுத்த அறை மனி நேரத்தினுல்லேயே சிதருன்டு கிடக்கும் முஸ்லிம் சமூகத்தினுல் அதன் சகோதரத்துவத்திற்கான தாகம் வெளிப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்…..!
பல சகோதர நண்பர்கள் தமது முகப்புத்தக அடையாளப்படத்தை மாற்றியும் பர்மிய முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் அட்டூழியங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இப்போராட்டத்திற்கான ஆதரவினை வழங்கினர்… அத்துடன் இம் மே 27 போராட்டத்திற்கான அழைப்பினையும் தம்மிடையே பரப்பி பல்வேறு இடங்களில் இருந்தும் இப் போராட்டத்திற்கான ஆதரவை அதிகரித்தனர்….
நேற்றிலிருந்து இந்தப் பந்தி எழுதும் வரையில் என் சார்பாக விடுக்கப்பட்ட வேண்டுகோள் சுமார் 300 க்கும் மேற்பட்ட பரப்புகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன… இதே போன்று மற்ற நண்பர்களின் இடுகைகளும் பரவலாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது… இவற்றை எல்லாம் வைத்துப்ப பார்க்கின்ற போது இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று மனித நேயம் பேனும் நோக்கிலும் சகோதரத்துவ உணர்வை வெளிப்படுத்தும் வகையிலும் இப் போராட்டத்திற்கு இலங்கை,இந்தியா,மலேசியா,கட்டார் ,சஊதி உட்பட உலகின் பல பாகங்களில் இருந்தும் கிட்டத்தட்ட 20000 த்திற்கும் மேற்பட்டோர் தமது ஆதரவினை வழங்கியுள்ளார்கள் என அனுமானிக்க முடிகிறது. எனினும் இத் தொகை கூடிச் செல்லலாமே ஒழிய குறைய வாய்ப்பில்லை…
இருந்தும் இதன் போது சுயநலம் கொண்ட சிலரின் பதிவுகளையும் காணமுடிந்தது.. இப் போராட்ட செயலின் மூலம் நாம் எதனை மாற்றிட முடியும், எதனை சாதித்து கொள்ளவியலும் என்பதுவே அவர்களுடைய முதல் கேள்வியாக இருந்தது…. அவர்களுக்கு சொல்வது என்னவெனில் இக்கால கட்டமானது சமூகத் தொடர்புகள் நிறைந்ததாகவும், உலகில் ஒரு சிறு இடத்தில் இடம்பெறும் விடயங்கள் சமூகவலைத்தளங்களினுடாக மிக விரைவாக அனைத்து மக்களையும் சென்றடையக் கூடியதாக இருப்பதுடன் இதன் மூலம் ஒரு விடயத்தின்பால் அனைவரையும் ஒன்றுசேர்க்கக் கூடியதாகவும் இருக்கின்றமையே இதன் மூலம் இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணமாகும்.
மேலும் இப் போராட்டத்தின் நோக்கமானது பார்மா முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் இனத்துவேச வன்முறைகளுக்கு எதிராக எதிர்ப்புக்களை தெரிவிப்பதும், இவ் இனவெறியாட்டத்தை வெளிஉலகிற்கு கொண்டுவராமல் மறைக்கும் ஊடகங்களுக்கு எதிர்ப்பை வெளியிடுவதும் , மற்றும் இவ் ஈனச்செயலினை கண்டும் காணாதது போல்இருக்கும் உலக தலைவர்களுக்கு எதிர்பபை தெரிவித்தும் பர்மிய முஸ்லிம்களின் விடயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் பதாகைகளை ஏந்திய புகைப்படங்களை பதிவிட்டு எதிர்ப்பு மேற்கொள்ளப்பட்டது.
தற்போதைய சமூக புரட்சியின் கூடமாக சமூகவலைத்தளங்கள் விளங்குவதை மல்லிகை புரட்சி(அறபு வசந்தம்) இடம் பெற்ற போதும் நமது நாட்டில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முகப்புத்தகத்தை தடை செய்ய எத்தனித்ததையும் உற்று நோக்குகின்ற போது உங்களால் மக்களின் தொடர்பாடலினிடையே சமூக வலைத்தளங்களின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடியும்..
எனினும் இப் போராட்டம் சமபந்தமாக எந்த ஊடகங்களும் ஒத்துழைப்பை வழங்காதது மிகப் பெரும் குறையே… எனினும் சில ஊடகங்கள் வாயிலாக இச் செய்தியை பரப்பி அக்கவலையை போக்கினர். அதற்காக முகநுல் நண்பர்கள் சார்பாக நன்றிகளை தெறிவித்து கொள்கிறோம்… மேலும் இப் போராட்டத்திற்கு பல்வேறு வழிகளிலும் ஆதரவினை வழங்கிய அனைத்து முகநுல் நண்பர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்…
இறுதியாக உங்களது துஆவில்இறைவனிடத்தில் பர்மிய முஸ்லிம்களுக்காகவும் , அத்துடன் காஸா,பலஸ்தீனம்,சிரியா,ஈராக்,லி பியா,யேமன் போன்று உலகில் எந்த மூலையிலும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றவர்களுக்காகவும் இறைஞ்சுமாறு வேண்டியவனாக விடைபெறுகிறேன்.
அல்லாஹூ அக்பர்……
அல்லாஹூ அக்பர்……