பிரான்ஸ் வீரரை தாக்கிய மெஸ்சியால் சர்ச்சை!
பார்சிலோனா அணியின் முன்னணி நட்சத்திர வீரராக திகழ்பவர் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த லயோனல் மெஸ்சி. அந்த அணியின் கேப்டனாக இருக்கும் மெஸ்சி...
http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_69.html
பார்சிலோனா அணியின் முன்னணி நட்சத்திர வீரராக திகழ்பவர் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த லயோனல் மெஸ்சி. அந்த அணியின் கேப்டனாக இருக்கும் மெஸ்சி சாதுவான குணம் படைத்தவர். பந்தை ஆக்ரோஷமாக கடத்திச் செல்லும் மெஸ்சி, எதிரணி வீரர்களால் கீழேத் தள்ளி விடப்பட்டாலும் கோப்படாமல் எழுந்து சென்று விடுவார்.
தன் அணி வீரர்கள் வாய்த்தகராறில் ஈடுபட்டாலும் சமாதானம் செய்து விலக்கி விடுவார். உலகக்கோப்பை, கோபா அமெரிக்கா ஆகிய இரண்டு தொடரின் இறுதிப்போட்டியிலும் அர்ஜெண்டினா தோல்யிடைந்த போதிலும் மெஸ்சி தனது முகத்தில் கோபத்தை வெளிப்படுத்தாமல் சாந்தமாகவே காணப்பட்டார்.
அப்பேற்பட்டவர் நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் எதிர் அணி வீரரை தலையால் முட்டியும், கழுத்தைப்பிடித்து தூக்கியும் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பார்சிலோனா- ரோமா அணிகளுக்கு இடையிலான பிரி-சீசன் பிரெண்ட்லி போட்டி நடைபெற்றது. இதில் பார்சிலோனா 3-0 என்ற கோல்கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.
போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது மெஸ்சிக்கும் ரோமா அணியின் மாபோவு யங்கா- பிவா (பிரான்ஸ்)-க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபத்தின் உச்சிக்கு சென்ற மெஸ்சி மாபோவு மார்பில் தலையால் முட்டினால். அதன் பின்பும் இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. மேலும் கோபம் கொண்ட மெஸ்சி மாபோவுயின் கழுத்தைப்பிடித்து தூக்கினார்.
இந்த சம்பவம் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருந்தாலும், மெஸ்சி சிவப்பு அட்டையிலிருந்து தப்பினார்.
மெஸ்சி எதிர் வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக கடந்த 2005-ம் ஆண்டு சிவப்பு அட்டை பெற்றிருந்தார். அதன்பின் கடந்த 11 ஆண்டுகளாக அவர் சிவப்பு அட்டை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
|