பாலியலுக்கு மறுத்த 19 பெண்களுக்கு மரணதண்டனை!
ஐ.எஸ். தீவிரவாதிகள், தமது குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் பாலி யல் உறவை வைத்துக் கொள்ள மறுத்த 19 பெண்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றி...
http://kandyskynews.blogspot.com/2015/08/19.html
![]() |
ஐ.எஸ். தீவிரவாதிகள், தமது குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் பாலி யல் உறவை வைத்துக் கொள்ள மறுத்த 19 பெண்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளதாக குர்திஷ் ஜனநாயகக் கட்சியின் பேச்சாளரான செயித் மிமோஸினி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட ஈராக்கிய மொசூல் நகரில் அந்தப் பெண்கள் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் பாலியலுக்காக பெண்கள் விற்கப்படுவது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் பிரதிநிதியொருவர் கூறுகையில், பெண்கள் பெற்றோல் பீப்பாக்கள் போன்று விற்கப்பட்டு வருவதாகவும் இதன் போது விற்கப்படும் பெண்ணொருவரை 6 வெவ்வேறு ஆண்கள் வாங்க முடிவதாகவும் தெரிவித்தார்.
கடந்த வருடம் வட ஈராக்கிய நகரான சின்ஜார் மாவட்டத்துக்குள் ஊடுருவிய ஐ.எஸ். தீவிரவாதிகள், யஸிடி சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்களை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றிருந்தனர்.
இதன் போது தப்பி வந்த சில பெண்கள், தாம் தம்மை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய தீவிரவாத குழு உறுப்பினர்களைத் திருமணம் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மரணதண்டனை நிறைவேற்றத்துக்கு உட்படுத்தப் பட்ட 19 பெண்களும் யஸிடி இனத்தவர்களா இல்லையா என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
|



Sri Lanka Rupee Exchange Rate