தென் ஆப்பிரிக்கா அதிரடி வெற்றி; 257 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை பந்தாடியது
இன்றைய உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 257 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இன்ற...
http://kandyskynews.blogspot.com/2015/02/257.html

இன்றைய உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 257 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 19ஆவது லீக் ஆட்டம் சிட்னியில் நடைபெற்றது. இதில் ’பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் – தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. இதில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குயின்டன் டி காக் மற்றும் ஆம்லா தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். தொடக்கத்திலேயே குயின்டன் டி காக் 12 ரன்னில் வெளியேறினார். பின்னர் தென் ஆப்பிரிக்க அணி 10 ஓவர்களில் வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நிதான ஆட்டத்தை வெளிபடுத்திய ஆம்லா அரைசதத்தை எட்டினார். மறுமுனையில் டூ பிளஸ்ஸும், ஆம்லாவிற்கு ஆதரவாக அரைசதத்தை கடந்தார். சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட டுபிளசி 62 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஆம்லாவும் 65 ரன்னில் வெளியேறினார். மேற்கண்ட இவ்விரு வீரர்களையும் ஒரே ஓவரில் கிறிஸ் கெய்ல் அவுட்டாகினார். பின் வந்த ரோசாவ் 61 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து விளையாடிய டிவிலியர்ஸ் அதிரடியாக செயல்பட்டு 52 பந்துகளில் சதத்தை எட்டினார்


Sri Lanka Rupee Exchange Rate