கொழும்பு துறைமுக வருமானம் அம்பாந்தோட்டை வரிப்பணத்திற்கு செலவு; ஜனாதிபதி
கடந்த சில வருடங்களில் கொழும்பு துறைமுகத்தின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், இலங்கை குடிமகன் எனும் வகையில் தான் மிகவும் கவலையடைவதாக ஜனாதி...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_100.html

கடந்த சில வருடங்களில் கொழும்பு துறைமுகத்தின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், இலங்கை குடிமகன் எனும் வகையில் தான் மிகவும் கவலையடைவதாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன குறிப்பிடுகின்றார்.
“M.V. LAGOONS’ எனப் பெயர் கொண்ட 400 பேர் பயணிக்கக் கூடிய பயணிகள் கப்பல் கொழும்பு ‘டொக்கியாட்’ மூலம் நிர்மாணிக்கப்பட்டு நேற்று ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவினால் இந்திய அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இதன் போது இந்திய லக்ஹத்வீப் பிராந்திய அதிகாரசபை அதிகாரிகள் ஜனாதிபதியிடமிருந்து கப்பலை கையேற்றனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த சில வருடங்களில் கொழும்பு துறைமுகத்தின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், இலங்கை குடிமகன் எனும் வகையில் தான் மிகவும் கவலையடைவதாக கூறினார்.
அத்துடன், கொழும்பு துறைமுகத்தின் வருமானத்தில் எந்தவொரு பகுதியும் இந்த நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தப்படாமல், அதன் வருமானம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் வரிப் பணம் செலுத்துவதற்கே செலவிடப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.


Sri Lanka Rupee Exchange Rate