தமிழ் வர்த்தகர் கொள்வனவு செய்த விமானம் சஜின் வாஸுக்கு சொந்தமானது எப்படி !
முன்னாள் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவிற்கு சொந்தமான கொஸ்மொஸ் லங்கா நிறுவனத்தில் பொருட்கள் ஏற்றிச் செல்லும் பதி...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_272.html

முன்னாள் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவிற்கு சொந்தமான கொஸ்மொஸ் லங்கா நிறுவனத்தில் பொருட்கள் ஏற்றிச் செல்லும் பதிவு செய்யப்படாத விமானம் ஒன்று இருப்பதாக தெரியவந்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. போயிங் 727 வர்க்கத்திற்குரிய இந்த விமானம் 2000ம் ஆண்டில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் அதனை இலங்கைக்கு கொண்டு வந்தவர் தமிழ் வர்த்தகரான மெதன் என்பவராவார். ஆரம்பத்தில் ஏரோ லங்கா என்ற பெயரில் யாழ் – இரத்மலான சேவையில் குறித்த விமானத்தை மெதன் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
களவு வழியில் இந்த விமானம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விமானம் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒன்றல்ல. மெதன் மீது 2010ம் ஆண்டு புலிகளுக்கு உதவியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட பின் சஜின்வாஸ் அந்த விமானத்தை கைப்பற்றியுள்ளார். பின் அதனை நீலம், வௌ்ளை, சிவப்பு என வர்ணமடித்து விமானம் காகோ லங்கா என பெரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த விமானம் கட்டுநாயக்கவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் நிறுத்தி வைப்பதற்கான கட்டணமும் செலுத்தப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன