வெற் மோசடி குற்றவாளிகளுக்கு 380 வருட கடூழியச் சிறை
மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருக்கும், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய வெற் ஊழல் மோசடியின் (400 கோடி ...

http://kandyskynews.blogspot.com/2015/02/380.html

மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருக்கும், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய வெற் ஊழல் மோசடியின் (400 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை) குற்றவாளிகள் இருவருக்கும். 380 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 8.7 பில்லியன் ரூபா தண்டமும் வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மேற்படி குற்றவாளிகள் இருவருக்கும் எதிராக ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ள தண்டனையை அமுல்படுத்தும்படியே,மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னகோன் இன்று உத்தரவிட்டார்,
மொஹம்மட் முர்சி ரசீட் மற்றும் மொஹம்மட் நஸ்மி நாகூர் அடிமை ஆகியோரே மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்..
அதன்பிரகாரம், மொஹம்மட் முர்சி ரசீட்டுக்கு 260 வருட கடூழிய சிறையும் (6.3 பில்லியன் ரூபா தண்டம் அடங்கலாக ),மொஹம்மட் நஸ்மி நாகூர் அடிமைக்கு 120 வருட கடூழிய சிறைத் தண்டனையும் (2.4.பில்லியன் ரூபா தண்டத்துடன்) வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது..
இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவல்களையடுத்தே இவர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டனர்..
இதேநேரம், இம்மோசடியின் பிரதான சூத்திரதாரியான, தற்போது டுபாயில் வசிக்கும் கார்மின் குதுப்தீனைக் கைது செய்யும் நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.(ரி)