சிறுபான்மையினர் பாதுகாப்பு ,மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய அரசாங்கம் கவனம் செலுத்த வலியுறுத்தல்
இலங்கையில் இடம்பெற்ற , இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் விரைவாக கவனம் செலுத்த வேண்டும் என சர்வதேச மனித உரிமை...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_183.html

இலங்கையில் இடம்பெற்ற , இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் விரைவாக கவனம் செலுத்த வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்படி சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. மேலும் அந்த கடிதத்தில் ,புதிய அரசாங்கம் பதவி ஏற்று சில காலத்திலேயே முக்கியமான சில விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தி இருந்தமை . வரவேற்கத்தக்கது குறிப்பாக அரச சார்பற்ற நிறுவங்கள் மீதான கண்காணிப்பை பாதுகாப்புஅமைச்சின் கீழ் இருந்து நீக்கியமை ஊடகங்கள் மீதான் கெடுபிடி தளர்த்தியமை , இணையம் மீதான தடை நீக்கப்பட்டமை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து , வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றி மீள்பார்வை செய்கின்றமை.அதேநேரம் இன்னும் முக்கியமான விடயங்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் துரித அவதானம் செலத்த வேண்டும் அவற்றுள் பொலிஸ் தடுப்புக்காவல் சித்தரவதை , சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு ,அரசாங்கத்தின் சுயாதீன ஆணைக்குழுக்கள், பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் துரித அவதானம் செலத்தப்பட வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate