நாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம் : யாழ் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
இந்திய வீட்டுத்திட்டத்தில் தாம் தொடர்ந்தும்புறக்கணிக்கப்படுகிறோம். என்று தெரிவித்து யாழ். மாவட்ட முஸ்லிம் மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_965.html
இந்திய வீட்டுத்திட்டத்தில் தாம் தொடர்ந்தும்புறக்கணிக்கப்படுகிறோம். என்று தெரிவித்து யாழ். மாவட்ட முஸ்லிம் மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.
மதியம் 1.30 மணியளவில் ஜும்மா தொழுகை முடிந்ததும் ஐந்து சந்திப் பகுதியில் கூடிய மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்திய வீட்டுத்திட்டம் வழங்குவதில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறோம். அதற்கு பிரதேச செயலாளர் தடையாக உள்ளார். எனவே அரச அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரி விடுத்தனர்.
இதன் போது பிரதேச செயலாளர் சுகுணரதி தெய்வேந்திரத்தின் கொடும்பாவியை எரிப்பதற்கு ஆர்ப்பாட்டக் காரர்கள் முயன்ற போதும் சமூக சேவகர்கள் என தங்களை அடையாளப்படுத்திய சில நபர்களை அதனை தடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
