முதுகெலும்பு இல்லாத சிலருக்கு மஹிந்த மீண்டும் தேவைப்படுகிறார்: அனுரகுமார
முதுகெலும்பு இல்லாத அரசியல்வாதிகள் சிலருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவருவதற்கு அவசியமிருப்பதாக மக்கள் விடுத...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_781.html

முதுகெலும்பு இல்லாத அரசியல்வாதிகள் சிலருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவருவதற்கு அவசியமிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரவித்துள்ளார்.
நேற்று குருணாகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மீண்டும் ஒருமுறை ராஜபக்சவின் தேசியவாதத்தை வீணடிக்கும் கூட்டத்திற்கு நாட்டை ஒப்படைத்தால் முழு நாடும் நாசமடைந்துவிடுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் முதுகெலும்பில்லாத சிலர் மகிந்த ராஜபக்சவை அரசியலுக்கு கொண்டுவருவதன் மூலம் தேசியவாதத்தினை தூண்டுவதற்கு முயற்சிக்கின்றனர். மேலும் தங்களது அரசியல் வாழ்க்கையை பாதுகாப்பதற்காக இவ்வாறு தேசியவாதத்தை தூண்ட முயற்சிக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில போன்ற கடும் ராஜபக்ச ஆதரவாளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதையும் அந்த கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது .
இந்த நிலைமையில், வீரவன்ஸ மற்றும் கம்மன்பில போன்றவர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பது சந்தேகத்திற்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate