முஸ்லீம் மக்களை நிராகரித்த ஈபிடிபி கட்சி?
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வட மாகாண முஸ்லீம்களை வேட்பாளராக சேர்ப்பதை ஈபிடிபி கட்சி கைவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இம்முறை இத்தே...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_552.html
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வட மாகாண முஸ்லீம்களை வேட்பாளராக சேர்ப்பதை ஈபிடிபி கட்சி கைவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இம்முறை இத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக தெரிவித்துள்ள இக்கட்சி அதன் வேட்பாளர்களை தற்போது தெரிவு செய்து வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் அக்கட்சி பிரதேச அமைப்பாளர்கள் சிலரையும்,வர்த்தகர்களையும் உள்ளடக்கி வேட்பாளர் பட்டியலை தயார் செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஆனால் வழமை போன்று இம்முறை தேர்தலில் முஸ்லீம் வேட்பாளர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை.இந்நிலையில் முஸ்லீம் மக்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்கள்.
அக்கட்சி செயலாளர் நாயகமாக உள்ள முன்னாள் அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா கூட கடந்த சில தினங்களிற்கு முன்னர் யாழ் விருந்தினர் விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் தான் வழமையாக பாவிக்கும் வணக்கம்,ஆயுவோபன்,அஸ்ஸலாமு அலைக்கும் என்பதை கூற தயங்கியதாக அங்கிருந்த ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இச்செயற்பாடுகளை பார்க்கின்ற போது கே.என் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி கூட வட பகுதியில் உள்ள முஸ்லீம் மக்களை மறக்க தயாராக இருக்கின்றதா என கேள்வி எழுப்பப்படுகின்றது.
எவ்வாறாயினும் முஸ்லீம் அரசியல் பிரமுகர்களை விட கணிசமான அளவு இவர் முஸ்லீம் மக்களிற்கு உதவி செய்துள்ளார்.
தற்போது இவரது நடவடிக்கை முஸ்லீம் மக்களிற்கு எதிராக உள்ளதை காட்டுவதாகவே அமைவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.யாழ் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் கடந்த காலத்தில் இக்கட்சி முஸ்லீம் வேட்பாளர்களை நியமித்த நிலையில் 3 பாராளுமன்ற பிரதிநிதிகளை பெற்றுக்கொண்டது.
எனினும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முஸ்லீம் மக்களை ஒதுக்கியுள்ளதுடன் வெறும் 2500 வாக்குகள் உள்ள சமூகமாக முகநூல்களில் சித்தரித்து வருவதாக அறிய முடிகின்றது.