பொலுபலசேனா – மகிந்தவுக்கு ஆப்பு ; சுதந்திரக் கட்சியின் தீர்மானம் வெளியாகியது
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பு மனு குழுவினால் சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 1. மஹிந்த ...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_605.html

1. மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்கப்படுவது ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு மாத்திரம்.
2. அவரருக்கு பிரதமர் வேட்புரிமை, குழு தலைமைப்பதவி வழங்கப்படுவதில்லை.
3. ஹம்பாந்தோட்டை மாவட்ட தலைவர், குழு தலைவர் அல்லது மாவட்ட ஏற்பாட்டளர் பதவி வழங்கப்படாது.
4. மஹிந்த ராஜபக்ச அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால் அவர் அப்பதவியில் இருந்து விலகி அதற்கு முகம் கொடுக்க வேண்டும்.
5. ஊழல் மோசடி குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் 17 உறுப்பினர்களுக்கு வேட்புமனு வழங்கப்படாது.
6. எவ்விதத்திலேனும் பொதுபல சேனா அரசியல் கட்சியை தங்கள் தேர்தல் வியாபாரத்தில் இணைத்துக்கொள்ள கூடாது.