சிங்களவர்களுக்காகவே நாம் தேர்தலில் போட்டியிடுகின்றோம்: ஞானசார தேரர்
சிங்களவர்களுக்காகவே நாம் தேர்தலில் போட்டியிடுகின்றோம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொ...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_430.html

சிங்களவர்களுக்காகவே நாம் தேர்தலில் போட்டியிடுகின்றோம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பு இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன என்னும் கட்சியாக போட்டியிடுகின்றது.
நாடாளுமன்றில் சிங்கள அடையாளங்கள் மருவிப் போயுள்ளது. சிங்களவர்களின் உரிமைகள் குறித்து குரல் கொடுக்கும் போது அது இனவாதமாக அடையாளப்படுத்தப்படுகின்றது. இது ஓர் துரதிஸ்டவசமான நிலைமையாகவே கருதப்பட வேண்டும்.
சிங்களவர்களுக்கு இல்லாத உரிமைகள் சிறுபான்மை இனத்தவர்களுக்கு நாட்டில் காணப்படுகின்றது.
சிறுபான்மை மக்களின் உரிமைகள் பற்றி குரல் எழுப்பும் போது அது உரிமைக் குரலாக அடையாளப்படுத்தப்படுகின்றது. எனினும், சிங்கள உரிமைகள் பற்றி பேசும் போது அது இனவாதமாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகள் காணப்பட்ட சிங்கள பௌத்த கலாச்சார அடையாளங்களை மறந்து அரசியல்வாதிகள், இலங்கை கலாசாரம் பற்றி வித்தியாசமாக உபதேசிக்கின்றனர்.
இந்த நிலைமையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஞானசார தேரர் சிங்களப் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.