மஹிந்த தரப்பை வெற்றி பெற செய்ய இரகசிய திட்டம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களை வெற்றி பெற செய்வதற்காக மேற்...


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களை வெற்றி பெற செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் இரகசியமான வேலைத்திட்டம் காரணமாக அந்த முன்னணி பிளவுபடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைக்குழுவின் தலைவர் பதவி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளது.
நடைமுறையில் உள்ள தேர்தல் முறை காரணமாக தமக்கு அநீதி ஏற்படும் என சந்தேகம் கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பு, இது சம்பந்தமாக ஜனாதிபதியிடம் தெளிவுப்படுத்த தயாராகி வருகிறது.
மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவானவர்களை வெற்றி பெற செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இரகசியமான வேலைத்திட்டம் தொடர்ந்தால், அதற்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினர் கலந்துரையாடி வருகின்றனர்.
மைத்திரிபால சிறிசேன தரப்பினர் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்க வேண்டாம் என மஹிந்த தரப்பு பகிரங்கமாக தெரிவிக்க ஆரம்பித்துள்ளதால், மைத்திரி தரப்பு கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.