யாழில் ஹன்டர் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்து! 13 பேர் படுகாயம்
யாழ்ப்பாணம் பிரதான வீதியில், தண்ணீர் தாங்கிக்கு அருகில் உள்ள மின்கம்பத்துடன் ஹன்டர் வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் படுகாயமடைந...

http://kandyskynews.blogspot.com/2015/07/13_19.html

யாழ்ப்பாணம் பிரதான வீதியில், தண்ணீர் தாங்கிக்கு அருகில் உள்ள மின்கம்பத்துடன் ஹன்டர் வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனத்தை செலுத்திய சாரதி தூங்கியதால் மின்கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சியில் கட்டட வேலை முடித்து விட்டு, உரும்பிராயிலுள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்த 14 பேர் இவ்விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
தற்போது காயமடைந்த அனைவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
கிளிநொச்சியிலிருந்து மேசன் தொழிலாளர்களை ஏற்றிவந்த பட்டா வாகனம் யாழ்.மாட்டின் வீதியில் ரயர் வெடித்து விபத்திற்குள்ளான நிலையில் வாகனத்தில் பயணித்த 13 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டும் உள்ளார்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து சம்பவத்தின்போது பட்டா வாகனத்தின் ரயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் ஓரத்தில் நின்ற மின் கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் மின்கம்பம் உடைந்து வாகனத்தின் மீது விழுந்துள்ளது.
இதன்போது வாகனத்தின் பின் பகுதியி்ல் இருந்த மேசன் தொழிலாளர்கள் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் படுகாயமடைந்தவர்கள் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.