ஸ்காட்லாந்து முயற்சி முறியடிப்பு, முதல்முறையாக 300-க்கு அதிகமான ரன்னை 'சேஸ்' செய்தது வங்காளதேசம்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் வங்காள தேசம் 300-க்கு அதிகமான ரன்னை 'சேஸ்' செய்து வெற்றி பெற்றது...

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் வங்காள தேசம் 300-க்கு அதிகமான ரன்னை 'சேஸ்' செய்து வெற்றி பெற்றது.
 

உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று நெல்சனில் நடந்த லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்–ஸ்காட்லாந்து அணிகள் (பி பிரிவு) மோதின. மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணி தொடக்க லீக்கில் ஆப்கானிஸ்தானை 105 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஆஸ்திரேலியாவுடனான ஆட்டம் அதிர்ஷ்டவசமாக மழையால் கைவிடப்பட்டதால் ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டது. இலங்கையிடம் 92 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் கால்இறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் வங்காளதேசம் களமிறங்கியது.

உலக கோப்பையில் ஆடிய 3 ஆட்டங்களிலும் ஸ்காட்லாந்து தோற்று இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் இதுவரை உலக கோப்பையில் ஆடிய 11 ஆட்டங்களிலும் தோல்வியே ஸ்காட்லாந்துக்கு சொந்தமானது, வேறு எந்த அணியும் இப்படி மோசமாக தோற்றதில்லை. இந்த சோகத்துக்கு வங்காளதேசத்திற்கு எதிராக முடிவு கட்ட ஸ்காட்லாந்து வீரர்கள் கடுமையாக முயற்சி செய்தனர். ஆனால் அவர்களது முயற்சி இன்றும் முறியடிக்கப்பட்டது. 318 ரன்கள் குவித்தும் பலனில்லாமல் சென்றுவிட்டது. இதுவரையில் உலக கோப்பையில் 250 ரன்களை சேஸ் செய்யாத வங்காளதேசம் ஸ்காட்லாந்தின் இலக்கை தகர்த்தது.

போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் பீல்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்து விளையாடிய ஸ்காட்லாந்து 318 ரன்கள் குவித்தது. 50 ஓவர்களும் நின்று விளையாடிய ஸ்காட்லாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் குவித்து, வங்காள தேசத்திற்கு 319 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. அணியில் அதிகப்பட்சமாக  கோட்செர் 156 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்களும் தங்களது பங்கிற்கு சிறப்பாக ஆடினர். இதனையடுத்து வங்காளதேச அணி பேட்டிங் செய்து விளையாடியது. வங்காளதேசம் இதுவரையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 250 ரன்களை சேஸ் செய்தது கிடையாது. முதல் முறையாக ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் அதனை செய்து காட்டியுள்ளது.  

ஸ்காட்லாந்து அணியில் அதிகப்பட்சமாக இக்பால் 95 ரன்களை(அவுட்) எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் சார்கார் 2 ரன்களில் அவுட் ஆனார். மெக்மதுல்லா 62 ரன்களுடனும், ராஹிம் 60 ரன்களுடனும் அவுட் ஆனார்கள். வங்காளதேசம் 48.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 322 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஸ்காட்லாந்தின் முயற்சிக்கு முட்டுக்கட்டையிட்டது. வங்காளதேசம் அணியில் இறுதியில் அல் ஹாசன் 52 ரன்களுடனும், ரகுமான் 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்

Related

விளையாட்டு 2305519277990585806

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item