சிறிலங்கா விடயத்தில் தவறு விட்ட இந்திராகாந்தி!
தமிழ் மக்களுக்கான உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ விடாபிடியாக இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ப...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_578.html
தமிழ் மக்களுக்கான உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ விடாபிடியாக இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் இந்த விடாபிடியான செயற்பாட்டின் காரணமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்காவுக்கு எதிராக பல நாடுகள் செயறப்பட்டன.
எனினும் தற்போது புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பல நாடுகள் சிறிலங்காவுக்கு ஆதரவளிப்பதாக சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
அத்துமீறி சிறிலங்கா கடற்பரப்பில் நுழைகின்ற தமிழக மீனுவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நகைச்சுவையான ஒருவிடயம். இதனை பெரிதுபடுத்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிறிலங்கா விவகாரத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி புத்திசாலித்தனமாக செயற்படவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையில் 3000 ஆண்டு நெருக்கமான உறவுகள் காணப்படுகின்றன. இந்தியா குறித்து எமது மக்களுக்கு நிறைய அன்பும் மதிப்பும் உள்ளது.
அதேவேளை சில அச்சங்களும் உள்ளன. தென்னிந்திய மன்னர்கள் 52 தடவை சிறிலங்காவை ஆக்கிரமித்துள்ளனர். இவர்கள் எமது நீர்ப்பாசன திட்டங்களை அழித்தனர். அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, மேலும் மக்கள் இந்தியர்கள் எங்களை போன்றவர்கள் இல்லை என கருதினர் அந்த எண்ணம் மிக சமீபகாலம் வரை நீடித்தது எனவும் சந்திரிக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

Sri Lanka Rupee Exchange Rate