ஏமனில் உடனடி போர் நிறுத்தத்துக்கு ஐ.நா. அழைப்பு
ஹவுதி கிளர்ச்சியாளர்களால் பாதிக்கப்பட்டு உள்ள ஏமனில், சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாட்டு படைகள் வான்தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால் அ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_897.html
ஹவுதி கிளர்ச்சியாளர்களால் பாதிக்கப்பட்டு உள்ள ஏமனில், சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாட்டு படைகள் வான்தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால் அங்கு உள்நாட்டு போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அங்கு அமைதியை ஏற்படுத்தும் விதமாக உடனடி போர் நிறுத்தத்துக்கு ஐ.நா. அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீ மூன் வாஷிங்டனில் பேசுகையில், ‘ஏமன் பற்றி எரிகிறது. எனவே அங்கு உடனடி போர் நிறுத்தத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பிரிவினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். அங்கு அமைதியை ஏற்படுத்தவும், உயிர்காப்பு உதவிகளை மேற்கொள்ளவும் இதுவே தகுந்த தருணம் ஆகும்’ என்றார்.
போரினால் பாதிக்கப்பட்டு உள்ள ஏமனில் பிராந்திய ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த ஐ.நா. ஆதரவு பேச்சுவார்த்தை நடவடிக்கைகளே சிறந்த வழி என்று கூறிய பான்கீ மூன், அங்கு ஒரு அரசியல் நடவடிக்கை மேற்கொள்ள சவுதி அரேபியா உறுதி அளித்துள்ளதாகவும் கூறினார். மேலும் இந்த பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் ஏமனின் அனைத்து பிரிவினரும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏமனுக்கான ஐ.நா. சிறப்பு தூதர் ஜமால் பெனோமர் ராஜினாமா செய்துள்ளதை தொடர்ந்து, புதிய தூதரை நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் பான்கீ மூன் கூறியுள்ளார்


Sri Lanka Rupee Exchange Rate