குற்றவாளிகளைப் பாதுகாக்க மாட்டேன்! - நாடாளுமன்றத்தில் ரணில்
ஒரு போதும் குற்றவாளிகளை காப்பாற்றவோ அல்லது அவர்களுக்காகப் பரிந்து பேசவோ, அவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு இடையூறு ச...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_69.html

ஒரு போதும் குற்றவாளிகளை காப்பாற்றவோ அல்லது அவர்களுக்காகப் பரிந்து பேசவோ, அவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யப் போவதோ இல்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டத்தின் ஆதிக்கத்துக்காகவும், நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்காகவும் தான் எந்தநேரமும் குரல் கொடுப்பவன் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பாராளு மன்றத்தில் நேற்று விசேட அறிவிப்பொன்றை விடுத்து உரை யாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிரச தொலைக் காட்சிக்கு தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் நேர்காணல் பெற்றுக்கொடுத்ததன் ஊடாக குற்றவாளிக்கும் எனக்கும் இடையே ‘டீல்’ இருப்பதாக நாட்டு மக்கள் மத்தியில் ஒரு கருத்தை பரவிவிடச் செய்வதற்கு மற்றுமொரு இலத்திரனியல் ஊடகம் முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
தேர்தலுக்கு முன்னர் குறிப்பிட்ட மூன்று தொலைக்காட்சி சேவைகளுக்கு நேர்காணல்களை கொடுத்தேன். தேர்தலுக்கு பின்னரும் அதே வரிசைப்படி கொடுப்பது என்று முடிவு செய்தோம். அதன்படியே கொடுத்தோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனம் மட்டும் துமிந்த சில்வா எம்பியை தொடர்புபடுத்தி எனக்கும் குறித்த தொலைக்காட்சிக்கும் டீல் இருப்பதாக ஒரு கருத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
துமிந்த சில்வா எம்.பி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான வழக்கும் இடம்பெற்று வருகிறது. இவற்றில் எந்தவொரு சட்டத்திலும் நான் தலையிட மாட்டேன். நாட்டில் ஒழுக்கமிக்க அரசு மட்டும் உருவானால் போதாது. ஒழுக்கமிக்க ஊடக கலாசாரமும் உருவாக வேண்டும். இதற்கு நடவடிக்கை எடுப்போம். நான் துமிந்த சில்வாவை காப்பாற்றுவதற்காகவே அவருடைய சகோதரருக்கு சொந்தமான தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கியிருப்பதாக மற்றுமொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கூறப்பட்டுள்ளது. இந்த கருத்தை மீண்டும் மீண்டும் கூறி மக்கள் மத்தியில் தன்னைப் பற்றி பிழையானதொரு அபிப்பிராயத்தை ஏற்படுத்த குறித்த தொலைக்காட்சி நிறுவனம் முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.
நாட்டின் பிரதமர் மீது நீதியற்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கு ஒருபோதும் செயற்படப் போவதில்லையென்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.


Sri Lanka Rupee Exchange Rate