மஹிந்த ஆட்சிக்கு வந்தால் ஆபத்து! சந்திரிக்கா எச்சரிக்கை
மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை சீரழித்து விடுவார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்தார். மஹிந...
http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_23.html

மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை சீரழித்து விடுவார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்தார்.
மஹிந்த நாட்டை சீரழித்ததன் பின்னர், ஒன்றிணைந்த போராட்டத்தின் மூலம் நாட்டை மாற்றியமைக்க முடிந்தது. கட்சியில் ஒரு பகுதியை உடைத்துக்கொண்டு மீண்டும் மஹிந்த ராஜபக்ச தேர்தலுக்கு வந்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் இத்தகைய முயற்சியை தோல்வியடையச் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நான் இரண்டு முறை ஜனாதிபதியாக செயற்பட்டேன். அந்த நேரத்தின் அரசியலமைப்பு திருத்தச்சட்டத்திற்கமைய, முக்கியமான வகையில், எனது பெற்றோர் என்னை வளர்த்த முறைக்கமைய அரசியலை விட்டு நான் விலகினேன்.
மஹிந்த மீதான நம்பிக்கையின் பெயரில் பலரின் எதிர்ப்புக்கு மத்தியில் அவருக்கு ஜனாதிபதி வேட்புரிமை வழங்கினோம். ஆனால் கடந்த ஒன்பது வருடங்களாக மஹிந்த நாட்டை சீரழித்து விட்டார். ஜனநாயகம், சுதந்திரம் என அனைத்தும் இல்லாமல் செய்யப்பட்டன.
கடந்த ஆட்சியின் போது மஹிந்த குடும்பத்தை யாரும் விமர்சித்தால் வெள்ளை-சிற்றூர்ந்து மூலம் கடத்தப்பட்டனர்.
ராஜபக்ச குடும்பம் நாட்டின் அனைத்து வளங்களையும் சுரண்டி சாப்பிட்டன. இவ்வளவு மோசடி செய்த ஒரு அரசாங்கத்தை நாங்கள் பார்த்ததில்லை, இப்படி ஒரு அரசாங்கம் காணப்பட்டதா என்பது எனக்கு தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்


Sri Lanka Rupee Exchange Rate