மீண்டும் அரசியலுக்கு வரமாட்டாராம் பசில் ராஜபக்ச!
தான் மீண்டும் அரசியலுக்கு வரும் திட்டம் கிடையாது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_88.html
தான் மீண்டும் அரசியலுக்கு வரும் திட்டம் கிடையாது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரண குணவர்தனவுடன் தொலைபேசியில் உரையாடிய போதே அரசியலுக்கு வரும் உத்தேசம் இல்லை என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“அரசியல் தொடர்பில் விரக்தி நிலைமை ஏற்பட்டுள்ளது.இதனால் மீளவும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் கிடையாது. தற்போதைக்கு இலங்கை வரும் திட்டம் இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்த தேவை ஏற்பட்டால் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்து வருவது அவ்வளவு சிரமமான விடயமல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Sri Lanka Rupee Exchange Rate