வெள்ளை மாளிகையில் புகைப்படம் எடுப்பதற்கான தடை உத்தரவை கிழித்தெறிந்தார் மிச்செல் ஒபாமா
வெள்ளை மாளிகையில் 40 ஆண்டுகளா அமுலில் இருந்த புகைப்படம் எடுப்பதற்கா தடை நீக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணங்களின் வருகையின் போது வெள்ளை மா...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_42.html

வெள்ளை மாளிகையில் 40 ஆண்டுகளா அமுலில் இருந்த புகைப்படம் எடுப்பதற்கா தடை நீக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணங்களின் வருகையின் போது வெள்ளை மாளிகையில் புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு படிவத்தை மிச்செல் ஒபாமா கிழித்தெறிந்து தடை உத்தரவு நீக்கப்பட்டதென அறிவித்தார்.
இந்த நடவடிக்கை மூலம் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் இளைஞர்கள் வெள்ளை மாளிகை மற்றும் நாட்டின் முதல் குடும்பம் பற்றிய உண்மையான விவரங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமையும் என்று கருதப்படுகிறது.
பார்வையாளர்களின் சுற்றுலா பாதையில் எதற்காக புகைப்படம் எடுக்க தடைவிதிக்கப்பட்டது குறித்த தகவல்கள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஃபிளாஷ் கமராவால் அங்குள்ள சிலைகள் மற்றும் கலைபொருட்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது.
தற்போது கமரா தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இப்போது உயர் தரமான புகைப்படங்களை ப்ளாஷ் இல்லாமல் கூட எடுக்க முடியும் என்ற நிலை உருவாகிவுள்ளது.
புதன்கிழமை வெள்ளை மாளிகைக்கு சுற்றுலா வந்த பயணிகள் விதிகள் மாற்றம் பற்றி கேட்கவில்லை, ஏனென்றால் ‘புகைப்படம் ஊக்குவிக்கப்படுகிறது’ என புதிய அடையாளங்கள் அங்கு காணப்பட்டன.
தெுமட்டுமன்றி ‘உங்கள் வெள்ளை மாளிகை அனுபவத்தை பகிர்ந்து கொள்ள #WhiteHouseTour to share your experience என்ற ஹேஸ்டேகை பயன்படுத்துமாறும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.
ஆனாலும் செல்போன் கமராக்கள், 3 அங்குல லென்ஸ் அளவுள்ள ஸ்டில் கமராக்கள் இப்போது அனுமதிக்கப்படுகிறது.
அதை விட அதிக அளவுள்ள லென்ஸ்கள், வீடியோ கமராக்கள்,டேப்லட், த்ரிபோடஸ் மற்றும் கமரா குச்சிகள் இன்னும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஃபிளாஷ் புகைப்படம் மற்றும் நேரடி ஸ்ட்ரீமிங் போன்றவற்றிக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate