ஆபாசப் படம் பார்த்த இங்கிலாந்து நீதிபதிகளின் பதவி பறிப்பு!

இங்கிலாந்து நாட்டின் மாவட்ட நீதிபதிகள், 3 பேர் அலுவலக இண்டர்நெட்டை பயன்படுத்தி பணி நேரத்தில் ஆபாசப் படத்தைப் பார்த்துள்ளனர். இங்...




இங்கிலாந்து நாட்டின் மாவட்ட நீதிபதிகள், 3 பேர் அலுவலக இண்டர்நெட்டை பயன்படுத்தி பணி நேரத்தில் ஆபாசப் படத்தைப் பார்த்துள்ளனர். இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தின், நீதிபதிகளின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட உயர்மட்ட விசாரணையில், நீதிபதிகளின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட நீதிபதி டிமோத்தி பவுலெஸ், குடியுரிமைத்துறை நீதிபதி வாரென் கிராண்ட், மாவட்ட துணை நீதிபதி மற்றும் பதிவாளரான பேட்டர் புல்லக் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

   
நான்காவது நீதிபதியான ஆண்ட்ரு மா என்பவர் இந்த விசாரணை முடியும் தருவாயில் தாமாகவே முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரட்டன் நாட்டு நீதித்துறை சட்டங்களின்படி, இவர்களின் செயல்பாடு மன்னிக்கத்தக்கது அல்ல. எனவே, இவர்களை பதவி நீக்கம் செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை என அந்நாட்டின் உயர் நீதிபதியான லார்ட் சான்செலர் குறிப்பிட்டுள்ளார்.

Related

உலகம் 330679284464012386

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item