இப்போது தான் மகிந்தவுக்கு தெரிந்தது

. ஆட்களைக் கைதுசெய்யும் போது பொலிஸார் பக்கச்சார்பாக நடந்து கொள்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மஹர சிறை...


.


ஆட்களைக் கைதுசெய்யும் போது பொலிஸார் பக்கச்சார்பாக நடந்து கொள்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தனவை பார்க்கச் சென்றிருந்த போதே ராஜபக்‌ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆட்களைக் கைதுசெய்யும் போது பொலிஸார் பக்கச்சார்பாக நடந்து கொள்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தனவை பார்க்கச் சென்றிருந்த போதே ராஜபக்‌ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.


கடந்த காலத்தில் என்னுடன் மிக நெருக்கமாக இருந்த நபர்கள் முறையற்ற விதத்தில் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். இது நல்லாட்சி அல்ல.பொலிஸாரின் கைது நடவடிக்கைகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த வேண்டும். பொலிஸார் அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயற்பட வேண்டாம். என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை - போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பற்றி உள்நாட்டு விசாரணை நடத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருப்பது பற்றி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. உறுதி மொழிகளை வழங்கினால் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் 'இது அவர்களின் அரசாங்கம், அவர்களால் எதுவும் செய்ய முடியும்' என்றும் கூறினார்.

இவ்வாறு உள்நாட்டு விசாரணை நடத்தப்பட்டால் போரில் ஈடுபட்ட ராணுவத்தினர் காட்டிக்கொடுக்கப்படுவார்கள் என்று எதிர்தரப்பினர் முன்வைக்கும் விமர்சனங்களை சுட்டிக்காட்டி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். 'அரசாங்கம் அவர்களை காட்டிக் கொடுக்கக் கூடும். ஆனால் மக்கள் இராணுவத்தினரைக் காட்டிக் கொடுக்க மாட்டார்கள்' என்றும் அவர் தெரிவித்தார்.

Related

இலங்கை 1959606437002440152

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item