அமெரிக்காவில் திருமணமாம்! - இந்திய பெண்ணின் முதல் ஒருபால் திருமணம்!
இந்திய பெண்களின் முதல் ஓரினத் திருமணம் அமெரிக்காவில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு உ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_969.html

இந்திய பெண்களின் முதல் ஓரினத் திருமணம் அமெரிக்காவில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு உடற்பயிற்சி நிலையமொன்றின் பயிற்சியாளராக ஷெனொன் பணியாற்றி வந்துள்ளார். அங்கு உடற்பயிற்சிக்காக வந்த சீமாவின் அழகு தன்னை ஈர்த்ததாகவும் முதல் பார்வையிலேயே அவர் மீது காதல் மலர்ந்ததாகவும், ஷெனொன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு நிகழ்ந்து சில மாதங்கள் கழித்து இருவருக்கிடையே உறவு வளர்ந்துள்ளது. பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.
பின்னர் இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர். இதையடுத்து, சீமாவின் விருப்பத்தின் படி இந்திய சம்பிரதாய முறையில் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றதாக தெரிகிறது. மேலும், ஷெனொன் மற்றும் சீமா என்ற இருவருக்கும் இடையே நடந்த இந்த திருமணம், அமெரிக்காவின் முதல் இந்திய பெண் ஓரினச் சேர்க்கை திருமணம் என்று தெரியவந்துள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate