கோத்தபாய கையெழுத்திட்ட அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு!

எவன் கார்ட் ஆயுதக் கப்பல் சம்பவத்துடன் தொடர்புடைய சகல ஆவணங்களையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குமாறு காலி பிரதான மஜிஸ் ட்ரேட்...



எவன் கார்ட் ஆயுதக் கப்பல் சம்பவத்துடன் தொடர்புடைய சகல ஆவணங்களையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குமாறு காலி பிரதான மஜிஸ் ட்ரேட் நிலுபுலி லங்காபுத்ரா நேற்று உத்தரவிட்டார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் கையொப்பத்து டன் கூடிய ஆவணங்கள் மற்றும் மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய 2010 முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான சகல ஆவணங் களையும் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எவன் கார்ட் ஆயுதக் கப்பல் சம்பவத்துடன் தொடர்புடைய சகல ஆவணங்களையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குமாறு காலி பிரதான மஜிஸ் ட்ரேட் நிலுபுலி லங்காபுத்ரா நேற்று உத்தரவிட்டார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் கையொப்பத்து டன் கூடிய ஆவணங்கள் மற்றும் மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய 2010 முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான சகல ஆவணங் களையும் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.


காலி துறைமுகத்திலுள்ள எவன்கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பான வழக்கு நேற்று காலி பிரதான மஜிஸ்ட்ரேட் நிலுபுலி லங்காபுத்ரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.மேற்படி ஆயுதக் கப்பல் தொடர்பாக நடத்தப்பட்ட விசார ணைகளின் போது ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழுள்ள குற்றச் செயல்கள் பல வெளிவந்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. எவன்கார்ட் வழக்கு விடயத்தில் தம்மிடமுள்ள ஆவணங்களை அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டியுள்ளதால் அதற்கான உத்தரவையும் பெற்றுக் கொடுக்குமாறு இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்தக் கப்பலிலுள்ளவற்றை வேறு கப்பல்களுக்கு ஏற்றுவதற்காக அதன் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள போதும் சட்ட மா அதிபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அதற்கு இடமளிக்க முடியாதென்றும் பிரதான மஜிஸ்ட்ரேட் நேற்று தெரிவித்தார். எவன்கார்ட் கப்பலில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று விண்ணப் பித்திருந்த போதும் குற்றப் புலனாய்வு திணைக்களம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் மனிதாபிமான அடிப்படையில் இதனை ஆராய்ந்து சட்ட மா அதிபரின் பரிந்துரைக்கமைய நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் காலி மஜிஸ்ட்ரேட் தெரிவித்துள்ளார். விசாரணை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related

மூன்று வாரங்களுக்கு மேல் நெஞ்சு எரிச்சலா? புற்றுநோயாக இருக்கலாம்

“புற்றுநோய் குறித்து தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள்” என்ற தலைப்பில் தேசிய விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்த 4 ஆம் திகதி பிரித்தானியாவில் தொடங்கப்பட்டது.இதில், மூன்று வாரங்கள் அல்லது மூன்று வாரங்களுக்கும் அத...

நான் இஸ்லாமியன் என்பதால், சிலர் என்னை விமர்சிக்கின்றனர் - றிசாத் பதியுதீன்

20 வருடத்துக்கு மேலாக செயலற்று போயுள்ள ஒட்டுச் சுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையினை மீள இயங்க வைத்து இதன் மூலம் பிரதேசத்தின் இளைஞர்,யுவதிகளுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கும் வேலைத்திட்ட...

அடகு வைக்கப்பட்ட தங்க ஆபரணங்களை வட்டியின்றி பெற நடவடிக்கை

இலங்கை அரச வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை ஏப்ரல் மாதம் வரை ஏலத்தில் விடவேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்ட யோசனைகளின் ப...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item