17க்கு பின்னர் சஜித்தை சிறை அனுப்புவோம்: எஸ்.பீ.திஸாநாயக்க
எதிர்வரும் 17ஆம் திகதியின் பின்னர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான முன்னணி ஆயத்தமா...
http://kandyskynews.blogspot.com/2015/08/17_10.html
எதிர்வரும் 17ஆம் திகதியின் பின்னர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான முன்னணி ஆயத்தமாகவதாக அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
பசில் ராஜபக்ச ஒரு நாள் சிறை செல்ல நேரிட்டாலும் சஜித் பிரேமதாஸவை 10 மாதங்கள் சிறை அனுப்புவதற்கு முன்னணி ஆயத்தமாகவுள்ளது.
ஜனாதிபதி, பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்துக்கொண்டார். குறித்த சந்தர்ப்பத்தில் ரணிலுக்கு 47 அமைச்சர்கள். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் எங்களுக்கு 127 அமைச்சர்களும் எங்கள் முன்னணிக்கு 127 அமைச்சர்களும் இருந்தார்கள்.
எங்கள் அமைச்சர்கள் அனைவரும் கூச்சலிட ஆரம்பித்துவிட்டார்கள். நாங்கள் அனைவரும் இணைந்து ரணிலை துரத்த முயற்சித்தோம். அதனை இலகுவாக செய்திருக்கலாம்.
எனினும் குறித்த சந்தர்ப்பத்தில் கூறினார்கள் அவ்வாறு எதுவும் செய்துவிட வேண்டாம் என்றும் நாங்கள் ரணிலை ஒரு மலரை போன்று பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் எங்கள் அமைச்சர்கள் கூறினார்கள்.
ரணில் மீது கொண்டுள்ள அன்பினாலோ அல்லது ஐக்கிய தேசிய கட்சி மீதான அன்பினாலோ அல்ல. குறித்த சந்தர்ப்பத்தில் தேர்தலுக்கு தாமதமாகிவிடும் என்பதனாலே ரணிலை துரத்தவில்லை.
அச் சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி அனைத்தையும் வெற்றியுடன் நிறைவேற்றி கொண்டோம். எங்களுக்கு அவசியமான நேரத்தில் தேர்தலை ஏற்பாடு செய்து கொண்டோம் என அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.