சுசில் மற்றும் பிரசன்னவுக்கு வாக்களிக்க வேண்டாம்! மக்களுக்கு ஆலோசனை வழங்கும் வீரவன்ச
கொழும்பில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பிரசன்ன சோலங்க ஆராச்சி ஆகியோருக்கு வா...

http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_49.html

பல பகுதிகளில் இடம்பெற்று வரும் மக்கள் சந்திப்புகளில் வீரவன்ச இவ்வாறு கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுசில் பிரேமஜயந்த மற்றும் பிரசன்ன சோலங்கஆராச்சி ஆகிய இருவரும் தேர்தலின் பின்னர் முன்னணியை விட்டு விலகவுள்ளாரகள் எனவும், தான் போதும் முன்னணியை விட்டு விலகப்போவதில்லை எனவே தனக்கு வாக்களிக்குமாறு விமல் வீரவன்ச கேட்டுக்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
தற்போதைய நிலைமைக்கமைய மஹிந்தவை மீண்டும் அதிகாரத்திற்கு அழைத்து வர முயற்சிக்கும் மஹிந்த தரப்பினருக்கு மாத்திரம் வாக்களிக்குமாறு அவர் பல மக்கள் சந்திப்புகளில் கூறிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னணியில் மறைந்திருக்கும் உள் நெருக்கடிகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ள நிலைமையில், நாடு முழுவதும் மைத்திரி - மஹிந்த தரப்பினருக்கு இடையில் மோதல் தொடர்ந்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.