ஜனாதிபதி பொலன்னறுவை முஸ்லிம் பள்ளிவாசலுக்கு விஜயம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பொலனறுவை முஸ்லிம் பள்ளிவாசலுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொலன...

http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_46.html

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பொலனறுவை முஸ்லிம் பள்ளிவாசலுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொலனறுவை மாவட்ட முஸ்லிம்கள் தமக்கு வழங்கிய அமோக ஆதரவு குறித்து ஜனாதிபதி நன்றி தெரிவித்துக்கொண்டார்.
மேலும் பள்ளிவாசல் உள்வளாகத்தில் நடைபெற்ற முஸ்லிம் மக்களுடனான சந்திப்பிலும் உற்சாகத்துடன் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால, அங்கு நீண்ட உரையொன்றையும் ஆற்றியிருந்தார்.
ஜனாதிபதியின் பள்ளிவாசல் விஜயத்தின் போது அப்பிரதேச முஸ்லிம் பெண்மணிகளும் வழக்கத்தை விட அதிகளவில் திரண்டுவந்து அவருக்கு வரவேற்பு வழங்கியிருந்தனர்.

