வசீம் தாஜூதீனின் சடலம் சிதைவடையவில்லை! சட்ட வைத்திய அதிகாரி தகவல் - செஞ்சிலுவைச் சங்கத்திடமும் விசாரணை

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் சடலம் சற்று முன்னர் தோண்டி எடுக்கப்பட்டது. தெஹிவளை வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் மையவாடியிலிருந...

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் சடலம் சற்று முன்னர் தோண்டி எடுக்கப்பட்டது.

தெஹிவளை வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் மையவாடியிலிருந்து சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சடலத்தை தோண்டி எடுக்கும் போது ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.






தாஜுடீன் சடலத்தை ஊடகங்களுக்கு காட்ட வேண்டாம் என குடும்பத்தார் பணிப்பு- மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பிரபல ரகர் வீரர் தாஜுடீனின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டதையடுத்து, பள்ளிவாசல் முன் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றும் நடைபெற்றது.

இன்று விசேட வைத்திய பரிசோதகர், கல்கிசை மஜிஸ்ரேட் நீதிபதி, மற்றும் குற்றத் தடுப்பு பொலிஸ் அத்தியட்சகர் கொண்ட குழுவினர் முன்னிலையில், தெஹிவளை களுபோவில முகையதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலில் காலை 8.30 மணிக்கு தாஜுடீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

வசீம் குடும்பத்தினர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், உடலை தோண்டும்போது அதனை ஊடகங்களுக்கு காட்டுவது தவிர்த்துக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

அதன் பின்னா் மையவாடி பள்ளிவாசல்கள் முற்றாக மறைக்கபட்டு பொலிசாரின் பாதுகாப்பு போடப்பட்டு அங்கு மையவாடிக்கு வெளியில் சிவப்பு நிற காரில் அவரது எலும்புகள், பாகங்கள் கொண்டு செல்லப்பட்டன.

இங்கு விசேட வைத்திய அத்தியட்சகர் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை அதற்குரிய சகல வசதிகளும் உள்ளன. அவரது உடலை அவரது சகோதரி, சகோதரர் அடையாளம் காட்டியிருந்தனர். பள்ளிவாசலின் பதிவு உள்ளது. அவர் அடக்கம் பண்ணப்பட்ட இடம் தோண்டப்பட்டு எலும்புகள் ஆராய்ச்சிக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவ் உடம்பில் உள்ள அடி காயங்கள், எலும்பு முறிவு, தலை ஓட்டில் அடி காயங்கள் பற்றி கண்டு பிடிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி இவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. என வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.

Related

தலைப்பு செய்தி 1062183790843498180

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item