அடகு வைக்கப்பட்ட தங்க ஆபரணங்களை வட்டியின்றி பெற நடவடிக்கை
இலங்கை அரச வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை ஏப்ரல் மாதம் வரை ஏலத்தில் விடவேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி க...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_627.html
இலங்கை அரச வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை ஏப்ரல் மாதம் வரை ஏலத்தில் விடவேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்ட யோசனைகளின் பிரகாரம் அரச வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளுக்காக அறவிடப்படும் வட்டி நீக்கப்படும் வரை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ள இரண்டு இலட்சம் ரூபாவிற்கும் குறைந்த பெறுமதியுடைய தங்க நகைகளுக்கான வட்டியை முழுமையாக நீக்குவதற்கு அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்தது.
ஆயினும், இதுவரை வங்கிகளினால் அந்த நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படாமை குறித்து இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் வினவப்பட்டது.


Sri Lanka Rupee Exchange Rate