காதல் மன்னன் நெய்மரின் புதிய காதலி
நெய்மரின் காதல் வலையில் புதிதாக எலிசபெத் மார்டினஸ் சிக்கியுள்ளார். பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் களத்தில் மட்டுமல்ல, காதல் விளையா...


பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் களத்தில் மட்டுமல்ல, காதல் விளையாட்டில் அசத்துவார். பிரேசில் நடிகை புருனா மார்குயிஜின், மருத்துவ கல்லுரி மாணவி கமிலா, பாட்ரிகா ஜோர்டன், கேபிரியலா, சொரஜா என நிறைய பெண்களுடன் பழகினார்.
தற்போது தன்னை விட 4 வயது மூத்த, பார்சிலோனாவை சேர்ந்த எலிசபெத் மார்டினசுடன், 26, நெருக்கமாக பழகி வருகிறார். வளமான குடும்பத்தை சேர்ந்தவர் எலிசபெத், கடந்த இரு ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் உதவியால் சந்தித்துக் கொண்டனர்.
பார்சிலோனா டி சர்ட் அணிந்த தனது படத்தை ‘இன்ஸ்டாகிராமில்’ எலிசபெத் வெளியிட நட்பு வளர்ந்தது. இருவரும் இணைந்து பார்சிலோனாவில் உள்ள பல்வேறு இரவு விடுதிகள், ஹோட்டல்களில் சந்தித்து வருகின்றனர்.
இது குறித்து டுவிட்டரில் நெய்மர் வெளியிட்ட செய்தியில், என்னுடன் இத்தனை பெண்களுக்கு தொடர்பு உள்ளதாக வெளியான செய்திகள் உண்மை என்றால், நான் 10 பெண்களுடன் தான் வாழ வேண்டும் என, தெரிவித்துள்ளார்.