ஐ எஸ் மீதான தாக்குதலுக்கு ஒப்புதல் கோருகிறார் ஒபாமா
இஸ்லாமிய அரசு என்ற அமைப்பின் தீவிரவாதிகளுக்கு எதிராக மூன்று ஆண்டு காலம் இராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை ...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_473.html
இஸ்லாமிய அரசு என்ற அமைப்பின் தீவிரவாதிகளுக்கு எதிராக மூன்று ஆண்டு காலம் இராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அதிபர் ஒபாமா கோரியுள்ளார்.
இத்திட்டத்தில் அமெரிக்கப் படைகள் மட்டுப்படுத்தபப்ட்ட வகையில் தரைவழித் தாக்குதல்களை முன்னெடுக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.
தற்போது இராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கட்டுப்படுத்திவரும் ஐ எஸ் அமைப்பு மீது தாக்குதல்களை நடத்த தனக்கு சட்டபூர்வமான அதிகாரம் ஏற்கனவே உள்ளது என்று அமெரிக்க அதிபர் கூறுகிறார்.
எனினும் அதற்கு நாடாளுமன்றத்தின் முழுமையான ஆதரவை அவர் கோரியுள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு இராக் மீதான இராணுவத் தாக்குதலை முன்னெடுப்பதற்கு முன்பாக முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் இதேபோன்று நாடாளுமன்றத்தின் அனுமதியைக் கோரியிருந்தார்.
ஆனாலும் அதிபரால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் தங்களுக்கு கவலைகள் உள்ளன என்று அமெரிக்க மக்களவையின் சபாநாயரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான ஜான் போய்னெர் தெரிவித்துள்ளார்.



Sri Lanka Rupee Exchange Rate