உலகம் ISIS இயக்கத்தில் சேரும் வெளிநாட்டுப் போராளிகள் தொகை அதிகரிப்பு!:அமெரிக்காஎச்சரிக்கை
சிரியாவிலும் ஈராக்கிலும் இஸ்லாமிய தேசம் ஒன்றை உருவாக்கும் நோக்கத்தில் போராடி வரும் ISIS இயக்கத்தில் இணைவதற்காக வெளிநாடுகளில் இருந்து செல்லும...

http://kandyskynews.blogspot.com/2015/02/isis_50.html

இது குறித்து அமெரிக்க தேசிய தீவிரவாத எதிர்ப்பு நிலையத்தின் இயக்குனர் நிக்கொலஸ் ரஸ்முஸ்ஸென் கருத்துத் தெரிவிக்கையில், ISIS இயக்கத்தில் இதுவரை 90 இற்கும் அதிகமான நாடுகளில் இருந்து 20 000 இற்கும் அதிகமான போராளிகள் சென்று சேர்ந்திருப்பதாகக் கூறியுள்ளார். புதன் கிழமை ஒழுங்கு செய்யப் பட்டிருந்த அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு கமிட்டியின் சாட்சியத்தின் அடிப்படையில் இத்தகவலை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் ISIS இல் சேரும் நோக்கிற்காக வெளிநாடுகளில் இருந்து சிரியாவுக்குச் சென்றுள்ள போராளிகளின் எண்ணிக்கை வீதம் எதிர்பார்த்திராத ஒன்று என்றும் கூறிய ரஸ்முஸ்ஸென் கடந்த 20 வருடங்களில் ஒரு வருடத்தில் எந்த ஒரு காரணத்துக்காகவும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், யேமென் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ள வெளிநாட்டு மக்களின் தொகையையும் இது மிஞ்சி விட்டதாகவும் கூறியுள்ளார்.