ரணில் விக்கிரமசிங்கவிடம் நரித்தனங்கள் உள்ளன - தமிழ்த் தலைவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்: - அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நரித்தனங்கள் உள்ளன. அதனால் தமிழ்த் தலைவர்கள் விழிப்பாக இருந்து, முழுவதும் நம்பிக்கை வைக்காமல் நடக்க வேண்...


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நரித்தனங்கள் உள்ளன. அதனால் தமிழ்த் தலைவர்கள் விழிப்பாக இருந்து, முழுவதும் நம்பிக்கை வைக்காமல் நடக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல் தெரிவித்துள்ளார். ஐ.நா அமைப்பினூடாக நீதி கிடைக்குமென்ற எதிர்பார்க்க முடியாது. அத்துடன், இதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று சொல்ல முடியாது. ஆனால் எங்களால் செய்யக் கூடிய அனைத்தையும் நாங்கள் செய்ய வேண்டும். கோபத்தினால் எதனையும் சாதிக்கப் போவதில்லை. அழிந்து போனவர்கள் போய்விட்டார்கள். ஏனையவர்கள் நிதானமாக நடக்க வேண்டும். இந்த நேரத்தில் தான் தமிழர்கள் தங்களது பலத்தைக் காட்ட வேண்டி உள்ளது என குறிப்பிட்டார்.