அரையிறுதியில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான்; 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
உலக்கோப்பை போட்டியின் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காலிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. உலக்கோப்பை ப...


அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சர்ஃப்ராஸ் அஹ்மது 10 ரன்களிலும், அஹ்மது ஷெசாத் 5 ரன்களிலும் வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய ஹரிஸ் ஷோகைல் மற்றும் மிஸ்பா உல் ஹக் இருவரும் விக்கெட் வீழ்ச்சியை தடுப்பதற்காக நிதான ஆட்டத்தை கையாண்டனர். எதிர்பாராதவிதமாக மிஸ்பா உல் ஹக் 34 ரன்களில் வெளியேறினார். அரைச்சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹரிஸ் ஷோகைலும் 41 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் அணல் பறந்தது. குறிப்பாக ஜோஸ் ஹசில்வுட் பந்துவீச்சு பிரமாதமாக இருந்தது. உமர் அக்மல் 20, மக்சூத் 29, ஷாகித் அஃப்ரிடி 23, வகாப் ரியாஸ் 16 ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் அந்த அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டும் எடுத்தது.
பாகிஸ்தான் அணி தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஸ் ஹசில்வுட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மிட்சல் ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்