மூன்று வெளிநாடுகளில் ரூ.521 பில்லியன் பதுக்கி வைப்பு; நிதியமைச்சர்
கடந்த அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களால் மூன்று வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரூ.521 பில்லியன் பணம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்...
http://kandyskynews.blogspot.com/2015/03/521.html

கடந்த அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களால் மூன்று வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரூ.521 பில்லியன் பணம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க.
சுவிட்சர்லாந்து, உக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இவ்வங்கிக் கணக்குகள் இருப்பதாகவும் அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இலங்கைக்கு உதவ ஏற்கனவே உலக வங்கியின் விசேட குழுவொன்றும் இலங்கை வந்திருக்கும் அதேவேளை சூறையாடப்பட்டிருக்கும் செல்வங்களை முழுமையாக மீட்பதற்கு நீண்ட காலம் செல்லலாம் எனவும் இருப்பினும் குற்றவாளிகள் விரைவில் அடையாளங் காட்டப்படுவார்கள் எனவும் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate