லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம்! பின் கதவால் சென்ற மைத்திரி
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பிரித்தானியா ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்த போது, அவருக்கு எதிராக சிறியளவிலான எதிர்ப்பு ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_928.html
இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு மைத்திரிபாலவும் பொறுப்புக்கூற வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

எனினும் இலங்கையின் புதிய அரசாங்கம் தமிழர் விடயத்தில் காத்திரமான பங்காற்றலை மேற்கொண்டு வருகிறது என்ற அடிப்படையில் முன்னரைப் போன்ற புலம்பெயர் தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று இலங்கையின் ஆங்கில இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஆங்கில செய்தித்தாளின் தகவல்படி 9 பேர் மாத்திரமே மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா ஆகியோரின் படங்களை தாங்கிய வண்ணம் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கருத்துரைக்கையில், ஆர்ப்பாட்டத்தை தவிர்ப்பதற்காக இலங்கை ஜனாதிபதி விமான நிலையத்தின் மூன்றாம் பின்கதவால் தப்பிக்சென்றதாக தெரிவித்துள்ளார்.
தொடர்புபட்ட செய்தி
இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு
இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு





Sri Lanka Rupee Exchange Rate