சவூதியில் ஆண் துணையின்றி வெளியேறிய பெண்ணுக்கு 200 கசையடிகள்
சவுதியில் பெண்கள் ஆண்கள் துணையின்றி வெளியே செல்ல கூடாது என சட்டம் உள்ளது. ஆனால் சவூதியைச் சேர்ந்த பெண்(19) ஒருவர் தனது நண்பர் ஒருவரை ...
http://kandyskynews.blogspot.com/2015/03/200.html
சவுதியில் பெண்கள் ஆண்கள் துணையின்றி வெளியே செல்ல கூடாது என சட்டம் உள்ளது.
ஆனால் சவூதியைச் சேர்ந்த பெண்(19) ஒருவர் தனது நண்பர் ஒருவரை சந்திக்க தனியாக சென்று உள்ளார்.
அப்போது அந்த பெண்ணுக்கு வாகன வசதி செய்து கொடுப்பதாக கூறி தனியான இடத்திற்கு அழைத்து சென்ற 7 பேர் கொண்ட கும்பல் அவரை கற்பழித்துள்ளது.
இதனை தொடர்ந்து கற்பழித்த ஆண்களுக்கும் சிறை தண்டனை விதித்து சவூதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் ஆண் துணையின்றி பெண்ணுக்கு நாட்டின் சட்ட திட்டத்தை கடைபிடிக்காதது குற்றத்தினால் 90 சவுக்கடிகள் வழங்கப்பட்டது.
கடந்த 2006ம் ஆண்டில் நடந்த இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர், இவ்வழக்கை சவுதி பொது நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
பொது நீதிமன்றத்தில் தீர்ப்பின்படி தற்போது சரியத் சட்டத்தின் படி 200 சவுக்கடிக்கள் வழங்கப்பட்டதுடன் 6 மாத கால சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate