சுவிட்சர்லாந்தில் புகலிடம் பெற விருப்பம் தெரிவித்தார் எட்வர்ட் ஸ்னோவ்டென்!
அமெரிக்கப் புலனாய்வு நிறுவனங்களின் தகவல் திருட்டு செய்கைகளை உலகுக்கு அம்பலப் படுத்தியவரும் அதன் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி ரஷ்யாவில் தற...


அமெரிக்கப் புலனாய்வு நிறுவனங்களின் தகவல் திருட்டு செய்கைகளை உலகுக்கு அம்பலப் படுத்தியவரும் அதன் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி ரஷ்யாவில் தற்காலிக அரசியல் அகதி அந்தஸ்துப் பெற்று வசித்து வருபவருமான முன்னால் NSA உறுப்பினரான எட்வர்ட் ஸ்னோவ்டென் சமீபத்தில் வீடியோ லிங்க் மூலமாக ஜெனீவா மக்களுடன் பேசுகையில் தான் சுவிட்சர்லாந்தில் புகலடக் கோரிக்கை பெற்று ஜெனீவாவில் வசிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிபிசி வெளியிட்ட செய்தியில் முன்னர் ஏற்கனவே அமெரிக்காவின் CIA இற்காக ஜெனீவாவின் பணி புரிந்த சில அனுபவ நினைவுகள் காரணமாகவும், குறைந்தது 300 வருடங்களுக்கும் அதிகமாக சுவிட்சர்லாந்து பின்பற்றி வரும் யுத்தத்தை அனுமதிக்காத நடுநிலமைக் கொள்கை காரணமாகவும் ஸ்னோவ்டென் அங்கு வசிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப் பட்டுள்ளது. ஆஸ்கார் விருதை வெற்றி பெற்ற ஸ்னோவ்டெனின் வழக்கு குறித்த 'Citizenfour' என்ற ஆவணப்படத்தை திரையிட்ட பின் வீடீயோ லிங்க் மூலமாக ஜெனீவா பார்வையாளர்களிடம் கதைக்கும் போதே ஸ்னோவ்டென் இவ்விருப்பத்தை சர்வதேச திரைப்படத் திருவிழாவின் மனித உரிமைகள் தொடர்பான கருத்துக் கணிப்பில் வியாழன் இரவு தெரிவித்துள்ளார்.
இதன் போது ஸ்னோவ்டென் சுவிட்சர்லாந்தின் பன்முகக் கலாச்சாரத் தன்மை மற்றும் மனித உரிமைகள் மீறல்களற்ற பதிவு என்பனவும் தனக்கு மிகப் பெரிய ஈர்ப்பாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் ரஷ்யாவில் ஸ்னோவ்டெனுக்கான ஒரு வருடத் தற்காலிக அகதி அந்தஸ்து முடியவுள்ள நிலையில் அவர் மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பாவை மையமாகக் கொண்டு சுமார் 21 நாடுகளுக்குப் புகலிடக் கோரிக்கைக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். முன்னர் ஸ்னோவ்டெனின் கடவுச் சீட்டை அமெரிக்கா ரத்து செய்து அவர் ஈக்குவடேரில் இருந்து வெளியேறுவதையும் தடுத்து இருந்தது.
இந்நிலையில் மிக வெளிப்படையான விசாரணைக்கு அமெரிக்க அதிகாரிகள் இன்னமும் தனக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை என்று ஸ்னோவ்டென் கூறியுள்ள அதேவேளை அமெரிக்கத் தரப்பில் அவர் சரணடையும் பட்சத்தில் அவருக்கு மரண தண்டை அளிக்கப் படாது என்று மட்டும் உறுதியளிக்கப் பட்டதாகவும் தகவல்கள் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.