. முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்களின் கோட்பாட்டை முன்னிறுத்தி அதுகுறித்து பயம், வெறுப்பை உண்டாக்கும் வகையிலான செயல்கள் கடந்த காலங்களில் மேற...
.
முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்களின் கோட்பாட்டை முன்னிறுத்தி அதுகுறித்து பயம், வெறுப்பை உண்டாக்கும் வகையிலான செயல்கள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக, இஸ்லாமிய ஆய்வு, தகவல் மையத்தின் தலைவர் மற்றும் உளவியல் ஆலோசகர், முஹமட் தக்லான் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் குறித்து தவறான தகவல்கள் இவர்களால் பரப்பப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது,
விஹாரை, கோவில் மற்றும் கிருஸ்தவ தேவாலயங்களுக்கு செல்ல முடியும். எனினும் இந்த முஸ்லிம் பள்ளிகளுக்குள் என்ன உள்ளது என்பது தெரியவில்லை என்கின்றனர்.
தெரியாவிடில் ஏன் அதுபற்றி பேசுகின்றீர்கள், இதற்குள் அதி பயங்கரமான இராட்சதன் இருப்பதாக நினைக்கின்றனர்.
இதுபோன்று இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்கள் பற்றி தவறான கருத்துக்களை பரப்புவது பாவமாகும்.
இந்த நாட்டில் உள்ள பௌத்த மக்கள் இதுபற்றி என்ன நினைக்கின்றனர். இவ்வாறானவற்றை நம்பிக் கொண்டு எமக்கு எதிராக சதி செய்கின்ற, எம்மை அழிக்க கட்டப்பட்ட கோட்டை என அவர்கள் எண்ணலாம்.
ஏன் இப்படி ஒரு அநியாயத்தை எமக்கு செய்கின்றீர்கள். முஸ்லிம் பள்ளிகளுக்குள் என்ன நடக்கிறது என்பது தெரியாதவர்கள் அது குறித்து தவறாக பிரச்சாரங்கள் மூலம் நாட்டிலுள்ள நல்ல பௌத்த, சிங்களவர்களிடம் எம்மைப் பற்றி தவறான எண்ணத்தை உருவாக்குவது ஏன்?
முஸ்லிம் பள்ளிகளுக்குள் எதுவும் இல்லை. அது ஒரு மண்டபம் மட்டுமே. இதனுள்ளே படங்கள் இல்லை, சிலைகள் இல்லை, எதுவும் இல்லை.
ஐந்து வேளை தொலுகை நடத்த நிர்மானிக்கப்பட்ட இடமே இது, இது இரகசிய அரை அல்ல, நுலகம் உள்ளது. அந்த புத்தகங்களை வந்து பாருங்கள், அது அனைவருக்கும் திறக்கப்பட்டுள்ளது, பள்ளிவாயல்களுக்குள் நுழைய முடியாது என்கின்ற கதை மாபெரும் பொய், இங்கு யாருக்கும் வரலாம்.
சமீபத்தில் சுகததாஸ உள்ளக அரங்கில் மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது. அது குரான் பற்றி ஓரளவு தெரிந்த அல்லது தெரியாத நிலையில் சில வாசகங்கள் கூறப்பட்டுள்ளன.
குரான் கொலை செய்ய அறிவுரை வழங்கும் புத்தகம் எனவும், தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்ற புத்தகம் எனவும் தவறான கருத்துக்களை வழங்கினர்.
குருடர்கள் நால்வர் யானையை ஆராய்ந்தது போன்று குராணை ஆராய முடியாது, என அவர் கூறியுள்ளார்.