பீட்சாவில் விஷம் வைத்து மகனை கொலை செய்த தந்தை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, தனது மகனை பீட்சாவில் விஷம்வைத்து கொலை செய்த தந்தைக்கு அந்நாட்டு ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_413.html

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, தனது மகனை பீட்சாவில் விஷம்வைத்து கொலை செய்த தந்தைக்கு அந்நாட்டு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ராங்க்சில் லியானார்டோ எஸ்பினால் என்பவருக்கு ரோசாவ்ரா ஏப்ருவ் என்ற மனைவியும், மியா என்ற 7 வயது மகளும், ஸ்டுவர்ட் என்ற 5 வயது மகனும் இருந்தனர்.
இந்நிலையில், அவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தற்கொலை கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு தன் மகள் மற்றும் மகனுக்கு விஷம் கலந்த பீட்சாவை கொடுத்துவிட்டு, தானும் விஷம் கலந்த பீட்சாவை சாப்பிட்டார்.
பீட்சாவை சாப்பிட்ட சில நிமிடங்களில் மகள் மியா வாந்தி எடுத்தார். பின்னர் எஸ்பினால் தனது உயிரை போக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் மகன் ஸ்டுவர்டை அழைத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டார்.
எஸ்பினாலின் வளர்ப்புத்தாய் குளியலறைக்குள் இருந்து வெளியே வருமாறு அழைத்தார். ஆனால் இதற்கு அவர் செவிசாய்க்கவில்லை. இதைத் தொடர்ந்து, காவல்துறையினரின் அவசர தொடர்பு எண்ணுக்கு அந்த வளர்ப்புத் தாய் தகவல் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் குளியலறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு சிறுவன் ஸ்டுவர்ட் இறந்து கிடந்தான்.
காவல்துறையினர், எஸ்பினாலை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைக்குப் பின்னர் காப்பாற்றப்பட்டார். பின்னர் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த, அமெரிக்க உச்ச நீதிமன்றம் எஸ்பினாலுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


Sri Lanka Rupee Exchange Rate