சவுதியில் பாகிஸ்தானியர் உள்பட 3 பேரின் தலைகளை துண்டித்து நேற்று மரண தண்டனை!
இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின்படி, மத துவேஷம், கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளை ஆகிய கொடும் குற்றங்களுக்கு ...
http://kandyskynews.blogspot.com/2015/03/3.html

இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின்படி, மத துவேஷம், கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளை ஆகிய கொடும் குற்றங்களுக்கு சவுதி அரேபியா நாட்டில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
அவ்வகையில், ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஒரு பாகிஸ்தானியர் மற்றும் சவுதியை சேர்ந்த இருவரின் தலைகளை வாளால் துண்டித்து இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கொடிய போதைப் பொருளான ஹெராயினை கடத்தி வந்த குற்றத்துக்காக தண்டிக்கப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த மும்தாஜ் ஹுசைன் தீன் அஹமத் என்பவருக்கு மதினா நகரில் நேற்று (17-03-2015) இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதேபோல், கொலை வழக்குகளில் தண்டிக்கப்பட்ட உள்ளூர்வாசிகளான நஜ்ர் பின் பரஸ் அல்-அஸ்மி அல்-ஒட்டைபி-க்கு தாயிப் நகரிலும், மொயிட் பின் அலி பின் மொயிட் அல்-சாட் அல் குவாடானி என்பவருக்கு கிழக்கு மாகாணத்திலும் இன்று தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவர்களையும் சேர்த்து, இந்த ஆண்டில் இதுவரை 48 பேருக்கு இங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate