சிகிரியாவில் கிறுக்கிய தமிழ் யுவதியை விடுதலை செய்யுமாறு பிரதி வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை
சிகிரியாவின் கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய தமிழ் யுவதியை விடுதலை செய்யுமாறு பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா ஜனாதிபதி மைத்திரிபால சி...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_338.html

சிகிரியாவின் கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய தமிழ் யுவதியை விடுதலை செய்யுமாறு பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த உதயசிறி சின்னத்தம்பி என்ற தமிழ் யுவதிக்கு இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மன்னிப்பு அல்லது விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அறியாமல் செய்த தவறுக்காக அரசியல் சாசனத்தின் 34ம் சரத்தின் பிரகாரம் மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று மூலம் கோரியுள்ளார்.
அரிசி ஆலையொன்றில் பணியாற்றி வரும் குறித்த யுவதிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காரணத்தினால் குறித்த யுவதியின் 74 வயதான தாய் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 14 ம் திகதி சிகிரியாவிற்கு குறித்த யுவதி சுற்றுலா சென்றிருந்த போது கண்ணாடிச் சுவரில் கிறுக்கியதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 2ம் திகதி இந்த யுவதிக்கு அனுராதபுரம் நீதிமன்றம் இரண்டாண்டுகால தண்டனை விதித்துள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate