சுத்தமான கொழும்பை உருவாக்கியவன் நான் தான்: சம்பிக்க சூளுரை
கொழும்பு நகரம் இன்று சுத்தமாக காணப்படுவதற்கு நானே காரணம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_627.html

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நான் சுற்றுச்சூழல் அமைச்சராக செயற்பட்ட காலத்தில் பாதைகளை அசுத்தப்படுத்துபவர்களுக்கு எதிராக 5000 ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டமூலத்தை கொண்டு வந்தேன்.
இச்சட்டமூலத்தை பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், என்னை குப்பை அமைச்சர் என்றும் அழைத்தார்கள்.
பின்னர் நகர அபிவிருத்தி அமைச்சு குறித்த சட்டமூலத்தை அமுல்படுத்தியிருந்தது. இன்று கொழும்பு நகரம் ஆசியாவின் தூய நகரமாக காணப்படுகின்றது. இதன் மூலகர்த்தா நான்தான்.
எதிர்ப்புகளுக்கு பயந்து இவ்வாறான சட்டமூலத்தை கொண்டுவராமல் இருந்திருந்தால் இன்று என்ன நடந்திருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate