பைஸர் முஸ்தபாவிற்கு மீண்டும் அமைச்சுப் பதவி?
பைஸர் முஸ்தபாவிற்கு இவ்வாரம் மீண்டும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி ஒன்று கிடைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனக்கு கிடைத்த ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_758.html

தனக்கு கிடைத்த அமைச்சின் உள் விவகாரங்கள் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பதவி விலகினார்.
இந்த நிலையில், ஐ.தே.க பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தற்போது வகிக்கும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு பதவி பைஸர் முஸ்தபாவிற்கு கிடைக்கவுள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அமைச்சுப் பொறுப்பை அவருக்கு கொடுக்க ஜனாதிபதிக்கு விருப்பம் இல்லை. எனினும் ரிசாத் பதியூதினின் பிடிவாத கோரிக்கையால் விருப்பமின்றி ஜனாதிபதி அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாரத்தில் மேலும் 10 அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் தமது பதவிகளை பொறுப்பேற்கவுள்ளனர்


Sri Lanka Rupee Exchange Rate