போர்க்குற்றங்களை மறைக்க அமெரிக்காவுக்கு லஞ்சம் வழங்கிய மஹிந்த
போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷ தன் மீதான குற்றச்சாட்டுகளை மூடி முறைக்க, அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெருந்தொகை பணத்தை இலஞ்சமாக...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_92.html

போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷ தன் மீதான குற்றச்சாட்டுகளை மூடி முறைக்க, அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெருந்தொகை பணத்தை இலஞ்சமாக வழங்கியதாக தெரிவித்துள்ளது.
இறுதிக்கட்ட போரின் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சார்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்க பாராளுமன்றத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நடவடிக்கைகளிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள மஹிந்த கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளார். இந்த தீர்மானங்களை தோற்கடிக்க அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள முக்கிய புள்ளிகளின் உதவியுடன் இந்த லஞ்சப்பணம் கைமாறியதாக தெரிய வருகிறது.
மஹிந்தவின் சார்பில் அமெரிக்காவில் உள்ள சில வியாபார நிறுவனங்கள் இதற்காக நிதியை வசூலித்து, அதனை இலஞ்சமாக வழங்கியதற்கான ஆதாரங்கள் தற்போது சிக்கியுள்ளன.
இது தொடர்பான தகவலை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இது போன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இலஞ்சம் கொடுக்க நிதி திரட்டுவது அமெரிக்க சட்டங்களை மீறிய செயல். அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பணம் வாங்கி இருந்தால், அந்த பணம் எதற்காக பெறப்பட்டது என்று அமெரிக்க சட்டப்படி அவர்கள் விளக்க வேண்டி இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.


Sri Lanka Rupee Exchange Rate