ஜனாதிபதி மாளிகை வாசலிலேயே தங்கியிருந்த பயங்கரவாதி!! திகிலூட்டும் தகவல்
கடந்த முதலாம் திகதி பரிசிலும் பரிசை அண்டிய பகுதிகளிலும் பயங்கரவாதத் தாக்குதல் சந்தேகத்தில் 18 முதல் 22 வயதுள்ளவர்கள் வரை ஆறுபேர் கைது செய...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_70.html

கடந்த முதலாம் திகதி பரிசிலும் பரிசை அண்டிய பகுதிகளிலும் பயங்கரவாதத் தாக்குதல் சந்தேகத்தில் 18 முதல் 22 வயதுள்ளவர்கள் வரை ஆறுபேர் கைது செய்து விசாரிக்கப்பட்டனர். இதனைப் பிரான்சின் உள்துறை அமைச்சர் பேர்நார் கசெநெவ் உறுதிப்படுத்தினார்.ஆனாலும் விசாரணைகளின் பின்னர் இவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கிய சந்தேகக் குற்றவாளியாக விசாரணை செய்யப்பட்டவர், போர்துக்கல்லில் பிறந்து பிரான்சின் குடியுரிமை பெற்ற ஒரு இளைஞனாவார். கிறிஸ்தவரான இவர் அண்மையில் இஸ்லாமிய மதத்திற்கு மாறியதோடு தீவிரமதவாத அமைப்புகளோடு தொடர்பும் வைத்துள்ளார். இவருடன் கைதானவர்களில் செச்சீனியாவைச் சேர்ந்த ஒருவரும் இரண்டு முன்னாள் இராணுவ வீரர்களும் அடங்குவார்கள். இவர்கள் அனைவரும் ஒரு தீவிர இஸ்லாமிய அமைப்புடன் தொடர்புடையவர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த மதம் மாறிய போரத்துக்கல் இளைஞன், அடிக்கடி தன் தாய் வேலை செய்யும் Rue du Faubourg Saint-Honoré இலுள்ள கட்டடத்தில் வந்து தங்கிச் செல்பவர். இந்தக் கட்டடம் ஜனாதிபதி மாளிகையான எலிசேமாளிகைக்கு நேர் எதிரில் உள்ளது. இந்தக் கட்டத்தின், கூரைக்குச் செல்லும் வழிக்கான சாவியும் இவரது தாயிடம் உள்ளது. இதில் ஏறினால் ஜனாதிபதி மாளிகையின் உட்புற முற்றம் தெளிவாகத் தெரியும். இந்த முற்றமான cour d'honneur, ஜனாதிபதியும் முக்கிய அரசியற் பிரமுகர்களும் வாகனங்களில் வந்திறங்கும் வரவேற்புப் பகுதியாகும். இந்தக் கூரைப்பகுதிக்கும் அடிக்கடி இவர் ஏறி இந்த முற்றத்தைக் கண்காணித்து வந்துள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறுபேரும் தங்களுக்குள்
சமூகவலைத்தளங்கள் மூலம் தொடர்பில் இருப்பவர்கள். அத்தோடு இவர்கள் தங்களிற்குள் பிரான்சில் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் செய்வதுபற்றிக் கதைத்தும் உள்ளனர். இவர்கள் ஆறுபேரும் Levallois-Perret (Hauts-de-Seine)யிலுள்ள புலானாய்வுத் தலைமையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டுள்ளனர். இருந்தாலும் கைது செய்து சிறையிலிடுவதற்கான போதிய ஆதாரங்கள் இல்லாமையினால், தற்போது ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் இவர்கள் மீதான பயங்கரவாதத் தடைப்பிரிவினரின் கண்காணிப்பு மிகத் தீவிரமாகத் தொடரும்.