108 இன்னிங்சில் 20 சதங்களை அடித்து சாதனை படைத்த அம்லா
கான்பெராவில் நேற்று நடைபெற்ற உலக கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக் காரர் அம்லா சதம்...
http://kandyskynews.blogspot.com/2015/03/108-20.html

கான்பெராவில் நேற்று நடைபெற்ற உலக கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக் காரர் அம்லா சதம் அடித்தார்.
இப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம் 108 போட்டிகளிலேயே 20 சதங்களை அடித்தவர் என்ற சாதனையை அம்லா படைத்தார். இதற்கு முன் 133 போட்டிகளில் 20 சதங்களை இந்திய வீரர் விராட் கோஹ்லி விளாசியிருந்தார்.
இச் சதத்தின் மூலம் கோஹ்லியின் சாதனையை அம்லா முறியடித்துள்ளார். மேலும் இப் போட்டியில் 159 ஓட் டங்களை குவித்ததன் மூலம், ஒரு நாள் போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரையும் அம்லா பதிவு செய்தார்.
தென் ஆபிரிக்க அணியில் 2வது விக்கெட் இணைப்பாட்டமாக அதிக ஓட்டங்களை குவித்து அம்லா-டு பிளிஸ்சிஸ் ஜோடி (247 ஓட்டங்கள்) சாதனை படைத்தது.
கடந்த போட்டியில் 400 ஓட்டங்களை குவித்த தென் ஆபிரிக்கா, இப்போட்டியிலும் மீண்டும் 400 ஓட்டங்களுக்கு மேல் குவித்தது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate